அண்மைய செய்திகள்

recent
-

த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் -மற்றும் மன்னார் பிராந்திய ஊடயவியலாளர் ஒருவர் கைது- புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைப்பு-படங்கள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் அரச ஊடகவியலாளர் உற்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் தற்போது விடுதலை செய்துள்ளனர்.


 இன்று மாலை 4.00 மணியளவில் மன்னார் பொலிஸாரினால் 6 பெண்கள் உற்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்  மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர்களில் 6 பெண்களை மன்னார் பொலிஸார் விடுதலை செய்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்இ தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் அரச ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோ உற்பட 9 பேர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவருகின்றனர்.

தற்போது குறித்த 9 பேரூம் மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு  மருத்துவ பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இறுதிக்கட்ட  யுத்தத்தில் இறந்த  தமிழ் மக்களை நினைவுகூர்ந்து மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற வேளை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை மன்னார் பொலிஸார் பலவந்தப்படுத்தி ஏற்றிச்சென்றதாக நேரில் கண்டவர்கள்  தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த 9 பேரூம் மன்னார் பொலிஸ் நிலையத்தில்  புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரனைக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதே சமயம் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த கைதுகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் தலமையிலான உடகவியலாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் காவல் கடமையில் இருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் அச்சுருத்தப்பட்டு பலவந்தமாக பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.








த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் -மற்றும் மன்னார் பிராந்திய ஊடயவியலாளர் ஒருவர் கைது- புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைப்பு-படங்கள் Reviewed by NEWMANNAR on May 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.