மன்னார் உட்பட நாட்டில் 74 பாடசாலைகள் ஒரு ஆசிரியரை மாத்திரம் கொண்டு இயங்குகின்றன...

52 தமிழ் மொழிப்பாடசாலைகளும் 22 சிங்கள மொழிப்பாடசாலைகளும் என இவ்வாறு இயங்குகின்றன. வட மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான ஒரு ஆசிரியரை மட்டும் கொண்டதாகச் செயற்படும் பாடசாலைகள் அமைந்துள்ளன. இம்மாகாணத்தில் 44 பாடசாலைகள் இவ்வாறு உள்ளன. இப்பாடசாலைகளில் 43 தமிழ் மொழிப்பாடசாலைகளும் 01 சிங்களப் பாடசாலையும் அடங்கும்.
வவுனியா மாவட்டத்தில் 34 தமிழ் மொழிப் பாடசாலைகளும் 01 சிங்களப் பாடசாலையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 05 தமிழ் மொழிப் பாடசாலைகளும் மன்னார் மாவட்டத்தில் 03 தமிழ் மொழிப்பாடசாலைகளும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 01 தமிழ் மொழிப்பாடசாலையும் கண்டி மாவட்டத்தில் 02 சிங்கள மொழிப் பாடசாலைகளும் மாத்தளை மாவட்டத்தில் 07 சிங்கள மொழிப் பாடசாலைகளும் நுவரெலியா மாவட்டத்தில் 02 சிங்கள மொழிப் பாடசாலைகளும் 01 தமிழ் மொழிப்பாடசாலையும் காலி மாவட்டத்தில் 01 சிங்கள மொழிப்பாடசாலையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 தமிழ் பாடசாலைகளும் திருகோணமலை மாவட்டத்தில் 02 தமிழ்மொழிப் பாடசாலைகளும் குருணாகல் மாவட்டத்தில் 01 சிங்களப் பாடசாலையும் அநுராதபுரம் மாவட்டத்தில் 01 சிங்கள மொழிப் பாடசாலையும் பதுளை மாவட்டத்தில் 02 சிங்கள மொழிப் பாடசாலையும் இரத்தினப்புரி மாவட்டத்தில் 1 சிங்களமொழி பாடசாலையும் 3 தமிழ் மொழிப் பாடசாலையும் கேகாலை மாவட்டத்தில் 04 சிங்களப் பாடசாலைகளும் செயல்படுவதாக மேலும் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் உட்பட நாட்டில் 74 பாடசாலைகள் ஒரு ஆசிரியரை மாத்திரம் கொண்டு இயங்குகின்றன...
Reviewed by NEWMANNAR
on
May 22, 2013
Rating:

No comments:
Post a Comment