நெடுந்தீவில் 40 அடி உயர மனிதனின் பாதச்சுவடு கண்டுபிடிப்பு (படங்கள் )
யாழ்., நெடுந்தீவு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுவதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார்.
பாறைகள் சிதைவடைந்து இந்த சுவடு உருவானதாக தெரிவிக்கப்படுகின்றது. 40 அடி மனிதன் ஒருவன் காலை வைத்ததால் உருவானதாகவும் இராமாயணப் போர் நடைபெற்றபோது அனுமான் மலையைத் தூக்கிக்கொண்டு வரும் போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நெடுந்தீவில் 40 அடி உயர மனிதனின் பாதச்சுவடு கண்டுபிடிப்பு (படங்கள் )
Reviewed by Admin
on
June 22, 2013
Rating:
No comments:
Post a Comment