அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு இன்று

அரசியலமைப்பை திருத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.


 இந்நிலையில் இதுதொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நேற்றிரவு விசேட கூட்டமொன்றை நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையே கூட்டமைப்பு இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

 அத்துடன், 13 ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்துவதனை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் வியாழக்கிழமை முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளது.

 இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பங்கேற்கவைப்பது தொடர்பில் அரசாங்கத்திலுள்ள இடதுசாரி கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு இன்று Reviewed by Admin on June 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.