மன்னார் உட்பட வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் தகவல்களை திரட்ட நடவடிக்கை
அண்மையில் நிறைவேற்றப்பட்ட வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சடடத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மன்னார் உட்பட வட மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கும் விசேட விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட தேர்தல் செயலகங்கள் ஊடாக இந்த விண்ணப்பப்படிவங்களை விநியோக்கவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டம் தேர்தல்கள் ஆணையாளரிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் உட்பட வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் தகவல்களை திரட்ட நடவடிக்கை
Reviewed by Admin
on
June 23, 2013
Rating:
No comments:
Post a Comment