பௌர்ணமி நாளான இன்று மிகப் பெரிய நிலா தோன்றும்!
அவ்வாறு சுற்றும் போது சில காலங்களில் பூமியில் இருந்து தொலைவிலும், சில காலங்களில் பூமிக்கு அருகிலும் நிலா வந்து செல்லும். அருகில் வரும் போது அதனால் பூமியில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாற்றம் காரணமாக கடல், காற்று போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
இயற்கை சீற்றங்களுக்கும் இந்த ஈர்ப்பு விசையே காரணமாகின்றன. இதனால் பௌர்ணமி காலங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று இரவு வானில் அதிசயம் நிகழ உள்ளது. நீள்வட்ட கோளப்பாதையில் சுற்றும் நிலா, பூமிக்கு மிக அருகில் வருகிறது.
அதாவது 2,21,824 மைல் தொலைவில் நிலா வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட நிலா சற்று பெரிய அளவில் தெரியும். அது வழக்கமான அளவை விட 30 சதவீதம் கூடுதலாக தெரியும் என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஓராண்டுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு தோன்றும் என்கின்றனர். பூமியின் ஒரு சில பகுதிகளில் இந்த மிக பெரிய நிலா இன்று காலை 7 மணிக்கே தெரிந்ததை வானியல் நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.
பௌர்ணமி நாளான இன்று மிகப் பெரிய நிலா தோன்றும்!
Reviewed by Admin
on
June 23, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment