மன்னார் பாடசாலைகள் சிலவற்றில் மதிய நேரத்தில் வழங்கப்படுகின்ற உணவு தரமற்றதாக காணப்படுவதாக விசனம் .
உலக உணவுத்திட்டத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மதிய உணவு தயாரிப்பதற்கான சகல விதமான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றது.
இந்த உலர் உணவுப்பொருட்கள் சமைக்கப்பட்ட மதிய உணவாக தரம்-01 முதல் தரம்-09 வரையான மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
ஆனால் சில பாடசாலைகளில் சமைத்து வழங்கப்படுகின்ற உணவு மாணவர்கள் சாப்பிட முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில மாணவர்கள் குறித்த உணவை சாப்பிடாது வீடுகளுக்கு கொண்டு செல்லுகின்ற போது அதனை பெற்றோர் சாப்பிட்டு பார்க்கின்ற போது எவ்வித சுவையும் அற்று உண்ண முடியாத நிலையில் காணப்படுவதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை சில பாடசாலைகளில் உலர் உணவுப்பபொருட்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படுவதாக தெரிய வந்துள்ளது.நெத்தலிக்கருவாடு,தேங்காய் எண்ணை,பருப்பு,உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் பாடசாலையை விட்டு வெளியில் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே மாணவர்களுக்கு சமைத்து வழங்கப்படுகின்ற மதிய உணவை பரிசோதிப்பதற்காக உலக உணவுத்திட்ட அதிகாரிகள் பாடசாலைக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு உணவை பரிசோதித்து மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுததுள்ளனர்.
மன்னார் பாடசாலைகள் சிலவற்றில் மதிய நேரத்தில் வழங்கப்படுகின்ற உணவு தரமற்றதாக காணப்படுவதாக விசனம் .
Reviewed by Admin
on
June 28, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment