அமைச்சர்களின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு துணை நிற்க மறுக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்-வினோ எம்.பி
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
அரச ஊழியர்கள் அதிரடியாக இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதினால் அடிமட்ட ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை சோர்வடைந்து மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றார்கள்.
அரசியல்வாதிகளை திருப்தி படுத்தினால் போதும் என கருதும் வாய்ப்பினை நோக்கி செல்ல உந்தப்படுகின்றார்கள்.இதனால் வன்னி யுத்தத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடமிருந்து தேவையான சேவையினை பெற்றுக்கொள்ள முடியாமல் வஞ்சிக்கப்படுகின்றார்கள்.
வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத கடும் அரசியல் அழுத்தங்களுக்கு வன்னியில் கடமையாற்றும் அதிகாரிகள் முகம் கொடுத்து வருகின்றார்கள்.
கறைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பி.குகநாதன் வன்னியில் அதிகாரம் பெற்ற அமைச்சரின் பிந்திய பலிக்கடாவாக்கப்பட்டிருக்கின்றார்.
இச்சர்வதிகார போக்கு உடன் நிறுத்தப்பட வேண்டும்.
நேர்மையுடனும்,அர்ப்பணிப்புடனும் கடமையில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மீது வீணான குற்றங்கள் சுமத்தப்படுவதும்,இடமாற்றம் செய்யப்படுவதும் தடுக்கப்பட்டு சுயமாகவும்,சுதந்திரமாகவும் செயல்பட சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர்களின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு துணை நிற்க மறுக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்-வினோ எம்.பி
Reviewed by Admin
on
June 28, 2013
Rating:

No comments:
Post a Comment