மன்னார் ஆயருக்கு எதிராக 'பொது பல சேன' அமைப்பு முன்வைத்த கருத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு கண்டனம்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் யுத்தம் நிறைவடைந்ததையடுத்து மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு, தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் குரல் கொடுத்து வந்தார்.
ஆனால் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வந்த பொதுபல சேனா என்ற இந்த இனவாத அமைப்பு தற்போது தமிழ் மக்களுக்கும் எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்காலம் முதல் குரல்கொடுத்து வருகின்றது. இதையே மன்னார் ஆயரும் செய்து வந்தார். இவ்வாறு தமிழ் மக்களுக்கு பக்கபலமாக செயற்பட்டு வரும் மன்னார் ஆயரின் செயற்பாட்டை பொதுபல சேனா என்ற இந்த இனவாத அமைப்புக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் இதன் எதிரொலியாக அரசாங்கத்திலும் இருந்து மன்னார் ஆயருக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையிலேயே பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த இனவாத கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு இவர் கூறியுள்ள கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது.
மன்னார் ஆயர் தமிழர் என்பதால் இவ்வாறான இனவாத கருத்துக்களை கூறிவருதோடு இவருக்கு எதிராக செயற்பட்ட சிங்கள ஆயர்கள் ஒன்றுப்பட்டு குரல் கொடுக்க வேண்டும் என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
ஆன்மீகப் பணியில் ஈடுபட்டுள்ள மன்னார் ஆயர் மக்களின் உரிமைகளுக்காக செயற்படக் கூடாது என எங்கும் கூறவில்லை. எனவே பொதுபல சேனா என்ற இனவாத அமைப்பின் கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் ஆயருக்கு எதிராக 'பொது பல சேன' அமைப்பு முன்வைத்த கருத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு கண்டனம்.
Reviewed by Admin
on
June 27, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment