அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் ஆணின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நல்லதண்ணிதொடுவா பிரதேசத்திலுள்ள களப்புப் பகுதியொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை இன்று வியாழக்கிமை மீட்டுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.


புத்தளம் மதுரங்குளி சமீரகம கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் முஹம்மது மன்சூர் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த ஒன்றரை மாதங்களாக முல்லைத்தீவில் தங்கியிருந்து கடற்தொழில் செய்துவருவதாக  ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த களப்பு பிரதேசத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக சடலத்தை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் ஆணின் சடலம் மீட்பு Reviewed by Admin on June 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.