இலங்கை காலநிலை மாற்றங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் - உலக வங்கி
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சூழலுடன் தொடர்புடைய பேரழிவுகளை குறைக்க தொழில்நுட்பரீதியான சுற்றுச்சூழல் நட்புறவு தீர்வாக அமையும் தெற்காசிய நாடுகளில் மோசமாக காலநிலை மாற்றம் நிகழ்ந்துவருகிறது.
அடுத்த பத்தாண்டுகளில் உலகின் சராசரி வெப்பநிலை 2 ° செல்சியசாக உயருமெனஎதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை உயர்வு காரணமாக காலநிலை மாற்றங்கள் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியன இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். இந்த பாதிப்புக்களிலிருந்து விடுபட அரசு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதோடு சர்வதேச ஒத்துழைப்பையும் நாடுவது அவசியாமாக உள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பானது பருவ மழைவீழ்ச்சியைப் பாதிப்பதோடு நீர்ப் பற்றாக்குறை, உணவுத்தட்டுப்பாடு என்பவற்றிற்கும் காரணமாக அமையும். இவற்றைத் தவிர்ப்பதற்கு வெள்ள பாதுகாப்பு முறைகள், வறட்சி மற்றும் வெப்ப எதிர்ப்பு பயிர்களைப் பயிரிடுதல், மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதறகாக வழிகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை காலநிலை மாற்றங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் - உலக வங்கி
Reviewed by Admin
on
June 27, 2013
Rating:

No comments:
Post a Comment