மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து-ஒருவர் காயம்.
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேசாலையில் இருந்து கடல் உணவு வகைகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி வந்த கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஓலைத்தொடுவாய் 5 ஆம் கட்டை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன் போது முச்சக்கர வண்டியை ஒட்டி வந்தவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.பின்னால் இருந்த ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து பிரண்டமையினால் குறித்த முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது. மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து-ஒருவர் காயம்.
Reviewed by Admin
on
June 25, 2013
Rating:

No comments:
Post a Comment