அண்மைய செய்திகள்

recent
-

கடந்த வாரம் அவுஸ்திரேலிய கடலில் 55 பேருடன் மூழ்கிய படகு முல்லைத்தீவிலிருந்து சென்றதா? சந்தேகம்

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து  படகு மூலம்  அவுஸ்திரேலியா சென்ற சுமார் 55 பேர் தொடர்பான தகவல்கள் தெரியாத நிலையில் அவர்களை ஏற்றிச் சென்ற படகுடனான தொடர்புகளும் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உறவினர்களை தேடும் படலம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 08ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களிலிருந்தும் வந்த சுமார் 55 பேருடன் முல்லைத்தீவிலிருந்து படகு ஒன்று அனுப்பப்பட்டிருக்கின்றது. இதற்கு ஒவ்வொருவரிடமிருந்தும் சுமார் 6லட்சம் ரூபா பணம் அற விடப்பட்டிருக்கின்றது. மேலும் இந்தப் படகை அனுப்பி வைத்தவர் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் டெனிஸ் என்பவராவார்.


 குறித்த படகு பயணித்து 16 நாட்களாகின்ற நிலையில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லையென உறவினர்கள் அங்கலாய்க்கின்றனர்.

மேலும் கடந்த வாரம் அவுஸ்திரேலிய கடலில் மூழ்கிய படகுகளில் இவர்கள் பயணித்த படகும் ஒன்று எனவும், இந்தப் படகில் பயணித்த பெண் ஒருவரின் சடலம் அவுஸ்திரேலியாவில் கரையொதுங்கியதாகவும், அதனை தாம் உறுதிப்படுத்தியிருப்பதாகவும், உறவினர்கள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர்.

 இந்நிலையில் அதில் பயணித்த 55 பேருக்கும் அதே நிலையே நேர்ந்திருக்கும் என உறவினர்கள் அச்சம் கொண்டிருக்கின்றனர். எனினும் குறித்த படகை அனுப்பியவர்கள் தொடர்ந்தும் அடுத்த படகை கடற்படையின் முழுமையான ஆதரவுடன் அனுப்புவதற்காக ஆட்களைத் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் அவுஸ்திரேலிய கடலில் 55 பேருடன் மூழ்கிய படகு முல்லைத்தீவிலிருந்து சென்றதா? சந்தேகம் Reviewed by Admin on June 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.