அண்மைய செய்திகள்

recent
-

இலட்சியத்துக்காக வேலை செய்த தமிழக வீரர் ப்ரவீன் பலி

இலட்சங்களில் சம்பளம், சொகுசு வாழ்க்கையை விட்டு இலட்சியத்துக்காக வேலை செய்ய போன தமிழக வீரர் ப்ரவீன் பலி


 உத்தர்காண்ட்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க போன போது விபத்துக்குள்ளான மீட்பு ஹெலிகாப்டர் நொறுங்கியதில் பலியானவர்களில் மதுரை விமானப் படை அதிகாரியும் ஒருவர்.

  இவர் மதுரை தியாகராய பொறியியல் கல்லூரியில் கடந்த 2007ம் ஆண்டு பிஇ முடித்த பிரவீன் அதிக ஊதியத்துடன் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறிவிட்டு தனது இலட்சியத்துக்காக 2009ஆம் ஆண்டு விமானப் படையில் இணைந்தார்.

 மேற்குவங்க மாநிலம் பராக்பூர் விமான படை தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பிரவீன், 2 நாட்களுக்கு முன்பு உத்தர்காண்ட் மீட்புப் பணிகளுக்கு சென்றார். புறப்படும் முன்னர் தாயாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

 பின்னர் மீட்பு பணி முடிந்த பின்னர் பேசுவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரை போன்ற இலட்சியவாதிகள் உயிரை கொடுத்து வேலை செய்கிறார்கள், அரசியல்வாதிகளோ இவர்களின் ஹெலிக்காப்டர்கள் வாங்குவதில் கூட ஊழல் செய்கிறார்கள்.


சற்றுமுன் செய்திகள்


இலட்சியத்துக்காக வேலை செய்த தமிழக வீரர் ப்ரவீன் பலி Reviewed by Admin on June 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.