மக்களின் போராட்டங்களை முன்னெடுக்க கூடிய கட்டமைப்பை தமிழரசுக் கட்சி ஏற்படுத்தவில்லை! பேராசிரியர் சிற்றம்பலம்
தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி தொடர்ச்சியான ஜனநாயக ரீதியான போராட்டங்களை உருவாக்கக் கூடிய கட்டமைப்பை தமிழரசுக் கட்சி ஏற்படுத்தவில்லை என அக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தல், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழு அமைத்தல், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் நிலைப்பாடு என்பன தொடர்பான விடயங்களை ஆராயும் முகமாக தமிழரசுக் கட்சியின் உயர் மட்ட குழுவினரின் சந்திப்பு ஒன்று கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் நேற்று காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துக் கூறிய போதே தமிழரசுக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி ஜனநாயக ரீதியான போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளப் போவதாக எமது தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக கூறி வருகின்ற போதும் அதற்கான எந்தவொரு கட்டமைப்பையும் இதுவரை உருவாக்கப்படவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளையும் இணைத்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு எம் மீது உள்ளது. ஆனால் தமிழரசுக் கட்சி சரியாக செய்யவில்லை என கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன இரா.சம்மந்தனிடம் கேள்வி எழுப்பினார்.
தமிழரசுக் கட்சியின் உடைய செயற்பாடுகளை நான் இனி பகிரங்கமாக ஊடகங்களில் வெளிப்படுத்துவேன். இதற்காக நான் நான்காம் மாடிக்கு சென்றாலும் பறாவாயில்லை எனவும் தெரிவித்தார்.
இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்மந்தனும் இவரின் கேள்விகளுக்கு பதில் கூறி இருவரும் முரண்பட்டுக் கொண்டதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Reviewed by NEWMANNAR
on
June 03, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 03, 2013
Rating:

No comments:
Post a Comment