எம் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை- மன்னார் நகர சபையின் உறுப்பினர் என். நகுசீன்
வேலையற்ற இளைஞர்கள் என்ற அடைமொழியுடன் சமூதாயத்தில் வாழ்ந்து கொண்டிருந்த எம் இளைஞர் யுவதிகளுக்கு இனியும் வேலை கிடைக்குமா?என்ற ஏக்கத்துடன் வாழ்ந்த எமக்கு இன்று ஒளிமயமான எதிர்காலம் பிறந்துள்ளது.
-எம் மீதும்,அமைச்சர் றிஸாட் பதீயுதீன் மீதும் நீங்கள் அனைவரும் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகவில்லை.அதன் பலனை நீங்கள் தற்போது அனுபவித்து வருகின்றீர்கள் என மன்னார் நகர சபையின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்துள்ளார்.
-இது தொடர்பில் அவர் இன்று ஊடக அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார்.அதில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,
-மன்னார் மாவட்டத்தில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அமைச்சர் றிஸாட் பதீயுதின் பல சோதனைகளையும்,தடைகளையும் தாண்டி பல சாதனைகளை இன்று இந்த மன்னார் மண்ணில் நிலை நாட்டியுள்ளார்.
அமைச்சர் அவர்களின் சேவைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
-30 வருட யுத்தமும்,அதன் வலியையும் வேதனைகளையும் நாம் சுமந்து இன்று அதில் இருந்து விடுபட்டு சுதந்திர காற்றை நாம் அணைவரும்,இன மத பேதமின்றி ஒருமித்து அனுபவித்து வருகின்றோம்.
-வேலை கிடைக்குமா என்று அவமானத்துடன் அழைந்து திரிந்த எமக்கு எதிர்காலத்தை சந்தேகத்துடன் பார்த்த உங்களுக்கு எம்மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.அதன் பலனை நீங்கள் இன்று அனுபவிக்கின்றீர்கள்.
-மன்னார் மாவட்டத்தில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் றிஸாட் பதீயுதின் அவர்கள் சாதி,மதம் பாரது பல இடையூறுகளுக்கு மத்தியில் இந்த நியமணத்தை நியாயமான முறையில் வழங்கியுள்ளார்.நாட்டின் முதுகெலும்பாக திகழும் இளைஞர் யுவதிகளின் ஆழுமையையும்,தேவையையும்,அவர்களின் மண உளைச்சல்களையும் புரிந்து கொண்டு சேவை செய்யும் ஆளுமையை கொண்டவராக இருக்கின்றார்.
-மாறி மாறி வரும் அரசியல் மாற்றங்களினால் பல வடுக்களையும்,வலிகளையும் சுமந்த நாம் அன்று இழந்தவை ஏறாலம்.அந்த யுத்தத்தில் இருந்து எம்மை மீட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சியின் கீழ் நாம் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றோம்.இதனை நாம் மறந்து விடக்கூடாது.அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றோம்.
-அமைச்சர் றிஸாட் பதீயுதீன் அவர்களின் சேவை இந்த வன்னி மண்ணில் இன்னும் உயர்ந்திட நாம் அனைவரும் அவருடன் கை கோர்த்து நிற்க வேண்டும்.என மன்னார் நகர சபையின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் நிருபர்-
(4-06-2013)
எம் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை- மன்னார் நகர சபையின் உறுப்பினர் என். நகுசீன்
Reviewed by NEWMANNAR
on
June 04, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 04, 2013
Rating:

No comments:
Post a Comment