சின்னமுத்து தடுப்பூசியை மீண்டும் ஒரு முறை வழங்குக
இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முன்னர் சின்னமுத்து தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தாலும் மீண்டும் தடுப்பூசியை அருகிலுள்ள தடுப்பு மருந்தேற்றல் நிலையங்களுக்குச் சென்று ஏற்றிக்கொள்ளுமாறும் வடமாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிறந்து 6 மாதங்கள் தொடக்கம் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பு மருந்து வழங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். எதிர்வரும் 5 ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து தடுப்பு மருந்தேற்றல் நிலையங்களிலும் முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை தடுப்பூசி ஏற்ற முடியும்.
கடந்த ஜனவரியிலிருந்து மே மாதம் வரையான காலப் பகுதியில் இலங்கையில் ஒரு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் மத்தியில் சின்னமுத்து நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இந்த நோய் சிக்கலான பின் விளைவுகளைத் தோற்றுவிக்கக்கூடியது. எனவே நோயைக் கட்டுப்படுத்த ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தாலும் மேலதிகமாக எதிர்வரும் 5 ஆம் திகதியும் மருந்தேற்றல் நிலையங்களுக்குச் சென்று சின்னமுத்துக்கு எதிரான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி 2012 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதிக்கும் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் மேலதிகமாக சின்னமுத்து தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னமுத்து தடுப்பூசியை மீண்டும் ஒரு முறை வழங்குக
Reviewed by Admin
on
June 30, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment