அடிப்படை வசதிகளின்மையால் மக்கள் மீள் குடியேறத் தயக்கம்
அவர் மேலும் குறிப்பிடுகையில் பூர்வீகக் கிராமமான தென்னை மரவடிக் கிராமத்தில் இதுவரை 150 குடும்பங்கள் குடியேற்றப்பட்டபோதும் இன்னும் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்படவேண்டியுள்ளன.
இவர்களின் அடிப்படை வசதிகளோ மின்சாரம், நீர் பாடசாலை, போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படாமையினால் முல்லைத்தீவு மாவட்டத்திலும் திருகோணமலையிலும் இடம்பெயர்ந்து இருக்கும் இவர்கள் குடியேற ஆர்வம் காட்டுகிறார்களில்லை.
நிரந்தர உறுதியில்லாமல் அனுராதபுர நிர்வாக மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட நிலை இப்பொழுது மாற்றப்பட்டு, தென்னமரவடிக்கிராமம் திருகோணமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பதனால் அண்மையில் காணி உரிமம் அற்ற 75 குடும்பங்களுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் மக்கள் இல்லாத காலத்தில் பதவிபிரிபுர மக்களால் கையாளப்பட்டுவந்த இந்த கிராமத்தவர்களின் வயல் நிலங்களும் மீளப்பெறப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றார்.
அடிப்படை வசதிகளின்மையால் மக்கள் மீள் குடியேறத் தயக்கம்
Reviewed by Admin
on
June 30, 2013
Rating:

No comments:
Post a Comment