வட, கிழக்கில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள்: சிவசக்தி ஆனந்தன்
வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் 90ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளனர். அவர்களில் 50 ஆயிரம் பேர் போராளி குடும்பங்களைச் சேர்ந்த விதவைகள் என்பது குறிப்பிடத்தக்கது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'ஈழப்போராட்டத்தில் அனைத்து இயக்கங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளை நாங்கள் இழந்துள்ளோம். மூன்று இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களை இழந்துள்ளோம். கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்துள்ளோம். பலகோடி பெறுமதியான உடமைகளை இழந்துள்ளோம்.
அதிலும் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளனர். அவர்களில் 50 ஆயிரம் பேர் போராளி குடும்பங்களைச் சேர்ந்த விதவைகள் என்பது குறிப்பிடத்தக்கது
இவர்களில் அதிகமானோர் இளம் விதவைகள். அதற்கும் அப்பால் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்று ஊனமுற்றவர்களாக உள்ளனர். இன்று வடக்கினை எடுத்துக்கொண்டால் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய், தந்தையரை இழந்து உறவுகளை இழந்து நிற்கின்றனர். இதுவே இன்றைய நிலை.
இன்று தமிழர்களின் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது என்றால் ஐ.நாவின் கதவை தட்டியுள்ளது என்றால் ஆயுதப்போராட்டம் மூலம் இழந்த போராளிகளின் உயிர் தியாகமும் மூன்று இலட்சம் மக்களின் உயிர்த்தியாகமும்தான்.
இந்த ஆயுதப்போராட்டமும் பொதுமக்களின் தியாகமுமே சர்வதேச சமூகத்தை எமது பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதனால்தான் நாங்கள் அது தொடர்பில் பேசிக்கொண்டுள்ளோம்.
இந்த போராட்டத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. போர்க்குற்றம் நடந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. சர்வதேச நாடுகள் இலங்கைக்கு இது தொடர்பில் அழுத்தங்களை கொடுத்துக்கொண்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் தவறவிடக்கூடாது. இதனை சரியானமுறையிலே பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதுவே எங்களுக்காக உயிர்த்தியாகங்களை செய்த போராளிகளுக்கு நாங்கள் செய்த அஞ்சலியாக இருக்கும்' என்றார்.
.jpg)

Reviewed by NEWMANNAR
on
June 21, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment