முதலாவது தமிழ் குறும்பட விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது – படங்கள்

வருகின்றது. குறும்படங்கள், திரைப்படம், இசை ஆகிய துறைகளில் தனது தனித்துவத்தினை வட மாகாணம் காட்டிநிற்கின்றது”
தமிழ் குறும்பட விழா – 2013 நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மணிமண்டபத்தில் 09 யூன் 2013 அன்று நடைபெற்றது. இவ்வாறான விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்தது. வட மாகாண ஆளுநர் ஜீஏ சந்திரசிறி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.
பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்படி குறும்பட போட்டிக்கு ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது. இதில் 34 குறுந்திரைப்படங்கள் போட்டியிட்டன. இறுதிச்சுற்றில் சிறந்த 10 திரைப்படங்களும் இறுதியில் 3 மிகச் சிறந்த திரைப்படங்கள் தெரிவுசெய்யப்பட்டு முறையே 20,000 ரூபாய் ரொக்கப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தண்ணீர், வல்லூறு, சலனம் ஆகிய திரைப்படங்களே இறுதிச்சுற்றுக்குத் தெரிவாகிய குறுந்திரைப்படங்கள் ஆகும். 10 சிறந்த கலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, இசை, ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை போன்ற துறைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு ஆளுநர் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கிக் கௌரவித்தார்.
இந்நிகழ்விற்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தலைமை தாங்கினார். வட மாகாண பிரதம செயலாளர் திருமதி.ர.விஜயலட்சுமி அவர்களும் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.என்.சிறீதேவி அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
மிகச்சிறந்த மூன்று திரைப்படங்கள்
இல
|
குறுந்திரைப்படத்தின் பெயர்
|
தயாரிப்பாளர்
|
மாவட்டம்
|
பிரதேச செயலர் பிரிவு
|
1
|
தண்ணீர்
|
முகிலன்
|
யாழ்ப்பாணம்
|
நெடுந்தீவு
|
2
|
வல்லூறு
|
ஏ.ஜசிதரன்
|
யாழ்ப்பாணம்
|
யாழ்ப்பாணம்
|
3
|
சலனம்
|
ஞானராஜா அமல ஜெலன்
|
யாழ்ப்பாணம்
|
யாழ்ப்பாணம்
|
விசேட திரைப்பட விருதுகள்
இல
|
விருது தலைப்பு
|
வெற்றியாளர் பெயர்
|
மாவட்டம்
|
பிரதேச செயலர் பிரிவு
|
1
|
சிறந்த ஒளிப்பதிவாளர்
|
ஏ.ஜசீதரன் (வல்லூறு)
|
யாழ்ப்பாணம்
|
யாழ்ப்பாணம்
|
2
|
சிறந்த கலை இயக்குநர்
|
ஏ.நிஷாந்தன் (வேகம்)
|
மன்னார்
|
மன்னார்
|
3
|
சிறந்த இயக்குநர்
|
வீ.முகிலன் (தண்ணீர்)
|
யாழ்ப்பாணம்
|
நெடுந்தீவு
|
4
|
சிறந்த படத்தொகுப்பாளர்
|
கே.சுதர்சன் (எழுத்துப்பிழை)
|
யாழ்ப்பாணம்
|
சண்டிலிப்பாய்
|
5
|
சிறந்த சிறப்புச் சத்த சேர்ப்பாளர்
|
ஏ.அற்புதன் (வல்லூறு)
|
யாழ்ப்பாணம்
|
நல்லூர்
|
6
|
சிறந்த இசையமைப்பாளர்
|
கே.சத்தியன் (எ கோல்)
|
யாழ்ப்பாணம்
|
நல்லூர்
|
7
|
சிறந்த திரைக்கதையாசிரியர்
|
கே.சுதர்சன் (எழுத்துப்பிழை)
|
யாழ்ப்பாணம்
|
சண்டிலிப்பாய்
|
8
|
சிறந்த நடிகர்
|
ரி.தர்மலிங்கம்(எழுத்துப்பிழை)
ரி.ஜெயதீபன் (விட்டில்கள்)
|
யாழ்ப்பாணம்
|
நல்லூர்
கரவெட்டி
|
9
|
சிறந்த குழந்தை நட்சத்திரம்
|
ஆர்.டிமால் பேர்ட்(தண்ணீர்)
ஏ.அம்ஷா (எழுத்துப்பிழை)
|
யாழ்ப்பாணம்
|
நெடுந்தீவு
நல்லூர்
|
முதலாவது தமிழ் குறும்பட விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது – படங்கள்
Reviewed by NEWMANNAR
on
June 12, 2013
Rating:

No comments:
Post a Comment