மன்னார் பாலம்பிட்டியில் சட்டவிரோத மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்;பட்ட பாலம்பிட்டி கிராமத்தில்; உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகளே கைப்பற்றப்பட்டுள்ளதாக விடத்தல்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
17/06/2010 அன்று திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் பாலம்பிட்டி கிராமத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு டிப்பர் வண்டியில் கொண்டு சென்றுகொண்டிருந்தபோது பெரியமடு வீதியில் இந்த முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
டிப்பர் வாகனம் ஒன்றில் பெரிய 15 முதிரை மரக்குற்றிகளை மறைத்து இந்த மரக்குற்றிகளின் மேல்; கற்களினால் மூடிக் கொண்டு சென்றுகொண்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணையை விடத்தல்தீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மன்னார் பாலம்பிட்டியில் சட்டவிரோத மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
June 19, 2013
Rating:

No comments:
Post a Comment