மன்னார் மத்தி சமூர்த்தி வங்கி வைபவ ரீதியாக திறந்து வைப்பு!
மன்னார் மத்தி சமூர்த்தி வங்கி திறப்பு விழா இன்று புதன் கிழமை காலை மன்னார் பிரதேசச் செயலாளர் எஸ்.தயானந்தா தலைமையில் வைபவ ரீதியாக இடம் பெற்றது.
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபம் ஒன்றில் தற்காலிகமாக குறித்த சமூர்த்தி வங்கி திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபம் ஒன்றில் தற்காலிகமாக குறித்த சமூர்த்தி வங்கி திறந்து வைக்கப்பட்டது.
அண்மையில் மன்னார் மாவட்டத்தில் சமூர்த்தி உஸ்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் 225 சமூர்த்தி உஸ்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 68 சமூர்த்தி உஸ்தியோகஸ்தர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
இவர்களில் 7 பேர் மன்னார் மத்தி சமூர்த்தி வங்கியிலும்,ஏனையோர் கிராம சேவையாளர்களுடனும்,மன்னார் பிரதேசச் செயலகத்திலும் கடமையாற்ற நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச் செயலாளர் எஸ்.தயானந்தா தெரிவித்தார்.
இதன் போது சமூர்த்தி கொடுப்பணவுகளை பெறும் மக்களுக்கு இன்று சமூர்த்திக்கொடுப்பணவுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வுகளில் மன்னார் பிரதேசச் செயலாளர் எஸ்.தயானந்தா,சமூர்த்தி ஆணையாளர் எஸ்.சசிதரன்,மன்னார் நகர பிரதேச செயலக தலைமையக சமூர்த்தி முகமையாளர் எம்.ஐ.ஏ.அசீஸ்,மன்னார் உதவி பிரதேசச் செயலாளர் எஸ்.பவாகரன்,மன்னார் பிரதேச செயலக கிராம அலுவலகர்களுக்காண நிர்வாக உஸ்தியோகஸ்தர் எஸ்.ராதா பெணாண்டோ ஆகியோர் கலந்து கொண்டடை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மத்தி சமூர்த்தி வங்கி வைபவ ரீதியாக திறந்து வைப்பு!
Reviewed by NEWMANNAR
on
June 19, 2013
Rating:
No comments:
Post a Comment