நான் ஒரு அகதி !இன்று அகதிகள் தினம்!(கவிதை )
- நான் ஒரு அகதி
- எனக்கு இனம்,மதம்,நிறம்,
- மொழி என்பன இல்லை
- இருந்தும் நானொரு அகதி!
- அதிகார வர்க்கத்தின்
- அடக்கு முறையாளர்களின்
- ஆணையின் கீழ் கட்டுப்படாததால்
- நான் ஒரு அகதி!
- எந்தத்தேசம்,எந்த நாடு,
- என்றெல்லாம் எனக்கில்லை
- சிறுபான்மை, பெரும்பான்மையால்
- அடக்கப்பட்டதால் நானொரு அகதி!
- பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை
- என்ற ஜனநாயக வாதிகளினால்
- துரத்தப்பட்டதால்
- நான் ஒரு அகதி!
- நாங்களும் முற்றும்
- துறந்த முனிவர் போலதான்
- அனைத்தையும் இழந்ததால்
- நானொரு அகதி!
- அன்பை மட்டும்
- பகிர்ந்து கொள் என்றவர்களால்
- கொல்லப்பட நினைத்ததால்
- நான் ஒரு அகதி!
- ஏய் பிரபஞ்சமே !
- இந்த உலகத்தின்
- மூத்த குடியினர் யார்?
- அகதிகள் தானே!
- ம் நான் மிகவும்
- பெருமைப்பட்டுக்கொள்கிறேன்
- எங்கள் வழி வந்தவன் தான்
- என்னை அகதி ஆக்கினான்
- வருத்தங்கள்
- மனசோரம் இருந்தாலும்
- நாம் காட்டிக்கொ(ல்)ள்வதில்லை -ஏனெனில்
- நான் ஒரு அகதி!
- *சந்துரு*
நான் ஒரு அகதி !இன்று அகதிகள் தினம்!(கவிதை )
Reviewed by NEWMANNAR
on
June 20, 2013
Rating:

No comments:
Post a Comment