இலத்திரனியல் அடையாள அட்டை 2015இல் விநியோகம்
2015 ஆம் ஆண்டளவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவிக்கிறது.
இதற்கான விலை மனு தற்போது கோரப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார கூறியுள்ளார்.
அதன்பிரகாரம் அடுத்த 6 மாதங்களுக்குள் விலை மனுக்கள் ஊடாக தெரிவு செய்யபட்ட நிறுவனமொன்றுடன் புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளினதும் தரவுகள் திரட்டப்பட்ட பின்னர் புதிய தேசிய அடையாள அட்டைகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய இலத்திரனியல் அடையாள அட்டையில் உறுதியான பாதுகாப்பு முறைகளை உள்ளடக்கவும் எண்ணியுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலத்திரனியல் அடையாள அட்டை 2015இல் விநியோகம்
Reviewed by NEWMANNAR
on
June 20, 2013
Rating:
No comments:
Post a Comment