மன்னார் தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ் அணி வெற்றி பெற்று 2013 MPL சம்பியன் பட்டத்தினை வென்றது.(படங்கள்)
இதில் மொத்தமாக 21 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இவ் லீக் ஆட்டங்களின் முடிவுகளின் பிரகாரம்
சென்.அன்ரனிஸ் முதலாம் இடத்திலும்,
ஸ்டார் ஈகிள் இரண்டாம் இடத்திலும்,
சென்.விக்டரிஸ் மூன்றாம் இடத்திலும்,
இந்து முன்னணி நான்காம் இடத்திலும்
,யங் ஸ்டார் ஜந்தாம் இடத்திலும்,
சென்.ஜோசப் ஆறாம் இடத்திலும்,
கிறீன் பீல்ட் ஏழாம் இடத்திலும் இருந்தது.
அதன் பின்பு நடை பெற்ற PLAYYOFFS சுற்றுக்களின் முதலாவது போட்டியானது கடந்த 14ம் திகதி காலையில் நடைபெற்றது.
இதில் சென்.அன்ரனிஸ் அணியும் ஸ்டார் ஈகிள் அணியும் மோதியது. இதில் சென்.அன்ரனிஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
மதியம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மூன்றாம் இடத்திலிருந்த சென்.விக்டரிஸ் அணிக்கும் நான்காம் இடத்திலிருந்த இந்து முன்னணிஅணிக்குமிடையில் நடைபெற்றது.
இதில் சென்.விக்டரிஸ் அணிவெற்றிபெற்றது. 15ம் திகதிநடைபெற்ற PLAYYOFFS சுற்றின் இறுதிபோட்டியில் ஸ்டார் ஈகிள் அணியும் சென்.விக்டரிஸ் அணியும் மோதியது .
இதில் சென்.விக்டரிஸ் அணி வெற்றி பெற்று இறுதிபோட்டிக்குதெரிவாகியது.
நேற்று 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமைமதியம் 1.00 மணியளவில் -தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் அவர்களிக் தலைமையில் ஆரம்பமான மாபெரும் இறுதிபோட்டியில் தாழ்வுபாடுசென்.அன்ரனிஸ் அணியும் நடப்புசம்பியன் பேசாலைசென்.விக்டரிஸ் அணியும் மோதியது.
இதில் சென்.அன்ரனிஸ் அணி வெற்றி பெற்று 2013 MPL சம்பியன் பட்டத்தினை வென்று சென்.விக்டரிஸ் அணியிடமிருந்து MPL சுற்றுக்கிண்ணத்தினை சுவீகரித்தது.
2013 MPL சுற்றுத்தொடரில் அதிக விக்கெட்டுக்களைகைப்பற்றிய வராகசென்.அனிரனிஸ் அணியின் அகிலன் தெரிவுசெய்யப்பட்டார்.
இவர் மொத்தமாக 28.5 ஓவர்கள் பந்துவீசி 197 ஓட்டங்களைவழங்கி 18 விக்கெட்டுக்களைகைப்பற்றினார்.
ஆதிக ஓட்டங்களை பெற்ற வீரராக சென்.அனிரனிஸ் அணியின் மேனன் தெரிவுசெய்யப்பட்டார்.
இவர் மொத்தமாக 245 பந்துகளை சந்தித்து 301 ஓட்டங்களைகுவித்தார். இதில் 41 நான்கு ஓட்டங்களும் 08 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கும்.
இவர்களுக்குகாசோலைகளும் மெடல்களும் வழங்கப்பட்டது.
-மன்னார் நிருபர்-
(17-06-2013)
மன்னார் தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ் அணி வெற்றி பெற்று 2013 MPL சம்பியன் பட்டத்தினை வென்றது.(படங்கள்)
Reviewed by NEWMANNAR
on
June 17, 2013
Rating:
No comments:
Post a Comment