வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பா.உ சிறீதரனால் கடனுதவி ஆரம்பித்து வைப்பு
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் போரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான கடனுதவித் திட்டம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக நேற்று (16-06-2013) ஞாயிற்றுனக்கிழமை அவரது அலுவலகமான அறிவகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக கனடா 'வாழ வைப்போம்' அமைப்பு தன்னுடைய வாழ்வாதார, மாற்றுவலுவுடைய, பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு மனித நேயப் பணிகளின் தொடர்ச்சியாக முப்பத்தைந்து மாணவர்களுக்கு மாதாந்தம் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் வழங்குவதற்கு முன்வந்து நேற்றைய தினம் இக்கடன் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட உதவியினை வழங்கியுள்ளது.
இன்னும் பல நூறு மாணவர்கள் இக்கடனுதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடன் இத்திட்டம் நேர்த்தியான வகையில் செயற்படுத்த அனைவரது ஒத்துழைப்பையும் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர் சமூகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,,,,
கனடா நாட்டில் வசிக்கும் எம் தமிழ் உறவுகளின் ஒன்றிணைந்த அமைப்பான ' கனடா வாழ வைப்போம்' அமைப்பினால் முதற்கட்டமாக 35 பேருக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இக்கடன் திட்டமானதுஇ கிளிநொச்சி மாவட்டக் கல்வி நிதியத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும்.
இத் திட்டத்தின் வெளிப்பாடு மாணவர்களின் கல்விக்கும் அவர்களின் வாண்மை விருத்திக்கும் பக்கபலமாக இருப்பதுடன் தொழில் வாய்ப்புக்களின்றிஇ தொழில் முயற்சிகளுக்கான எந்த ஆதாரங்களுமின்றி வெறுமனே அபிவிருத்தி பற்றிய கோஷங்களுக்குள் அடங்கிப் போகும் தமிழரின் உரிமைப் பிரச்சனைக்கு உணர்வுள்ள கல்விச் சமூகத்தினைக் கட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோரையும் சார்ந்ததாகும்.
உண்மையான யதார்த்தத்தைப் புரிந்து தமிழ்த் தேசியத்திற்கான இருப்பைத் தக்கவைக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் முழுமையாகப் பங்களித்திருக்கிறார்கள். தொடர்ந்தும் தமிழ்ச் சமூக விழிப்பிற்கும்இ எதிர்கால நம்பிக்கையைக் கட்டி வளர்ப்பதற்கும் மாணவர்களாகிய நீங்கள் உறுதி தளரா மனதுடன் செயற்பட வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

மன்னார் நிருபர்
(17-06-2013)
வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பா.உ சிறீதரனால் கடனுதவி ஆரம்பித்து வைப்பு
Reviewed by NEWMANNAR
on
June 17, 2013
Rating:

No comments:
Post a Comment