அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி பிணையில் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி எனப்படும் சிவகாமி சுப்ரமணியம் இன்று (26) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 


கிளிநொச்சி உதயநகர் தங்கபுரத்தை சேர்ந்த தமிழினி இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின் 2009ம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

பின்னர் அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

தமிழினிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதை தவிர்த்து அவரை புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த சட்டமா அதிபர் பரிந்துரைத்ததாக பொலிஸார் தரப்பில் 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக தமிழினியின் சட்டத்தரணி தெரிவித்திருந்தார். 

இதன் பின்னதாக தமிழினிக்கான புனர்வாழ்வு வவுனியா - பூந்தோட்டம் முகாமில் 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமானது. 

1991ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தமிழினி, புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். 

இதன் பின்னணியில் இன்று (26) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி பிணையில் விடுதலை! Reviewed by NEWMANNAR on June 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.