தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கொழும்பில் அவசரமாக கூடுகிறது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் விசேட கூட்டம், கொழும்பில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசியல் உயர் பீடம் ஒன்றை நிறுவுதல், அதன் கீழான தலைமைக்குழு, நிதிக்குழு, தேர்தல் குழு, அரசியல் விவகாரங்களுக்கான குழு உள்ளிட்ட நிர்வாக பொறிமுறையை ஏற்படுத்தி, இறுதி முடிவை வரையறை செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஜனநாயக ரீதியான ஒரு சக்தி மிக்க ஸ்தாபனமாக மாற்றி அமைப்பது தொடர்பிலும் வட மாகாண சபைத் தேர்தலில் யாரை முதன்மை வேட்பாளராக நியமிப்பது மற்றும் வட மாகாண சபைத் தேர்தலை வெற்றி கொள்வதற்கான உபாயங்களை வகுப்பது உள்ளிட்ட இலக்குகளை அடையும் ஒரு விசேட கலந்துரையாடலாகவே இன்றைய கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

Reviewed by NEWMANNAR
on
July 04, 2013
Rating:

No comments:
Post a Comment