பெற்றோரைப்பிரிந்த நிலையலும் 2000 மேற்பட்ட சிறுவர்கள் சிறுவர் இல்லங்களில்!
யுத்தத்தினால் வறுமை நிலை காணரமாக பெற்றோரைப்பிரிந்த நிலையலும் 2000 மேற்பட்ட சிறுவர்கள் சிறுவர் இல்லங்களில் வாழந்து வருவதாக சிறுவர் நன் நடத்தை திணைக்களத்தின் வடமாகாண ஆணையாளர் தி.விஸ்வரூபன் தெரிவித்திருக்கின்றார்.
வுடமாகாணம் தற்போது பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டு வருகின்றது அந்த அபிவிருத்திப் பணிகளுக்கு இடையில் சமூக நலத்திட்டங்டகளும் வடமாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் யுத்தத்தினால் குடும்ப வறுமை நிலை காரணமாக பெற்றோரைப் பிரிந்திருந்த சிறுவர்களை மீளவும் பெற்றோரிடம் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது வடக்கு மாகாணத்திற்குட்பட்ட ஐந்து மாவட்டங்களிலுமுள்ள சிறுவர் இல்லங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கிவாழ்ந்து வருகின்றனர். யுத்த காலத்தில் பெற்றோரைப்பிரிந்த நிலையலும் பெற்றோரையிழந்த நிலையிலும் இந்த சிறுவர்கள் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர்.என அவர் மேலும் தெரிவத்தார்.
பெற்றோரைப்பிரிந்த நிலையலும் 2000 மேற்பட்ட சிறுவர்கள் சிறுவர் இல்லங்களில்!
Reviewed by NEWMANNAR
on
July 04, 2013
Rating:

No comments:
Post a Comment