குரோதம் வேண்டாம்! ஒன்றிணையுங்கள்!- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
குரோதம் மிக்க அரசியலை கைவிட்டு, ஒன்றிணைந்து மக்களுக்கு சேவை வழங்குவது அனைவரதும் கடமை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆட்சியை பாதுகாக்கும் அரசியலுக்கு பதிலாக, நாட்டை பாதுகாக்கும் அரசாங்கம் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாதங்களாலும், போராட்டங்களாலும் நாட்டை ஒருபோதும் வெற்றிக் கொள்ள முடியாது என்றும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை மத்திய மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குரோதம் வேண்டாம்! ஒன்றிணையுங்கள்!- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
Reviewed by NEWMANNAR
on
July 27, 2013
Rating:

No comments:
Post a Comment