அண்மைய செய்திகள்

recent
-

அகதிகள் படகு விபத்து: 4 பெண்களின் சடலம் கரையொதுங்கின- உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு

இந்தானேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய அகதிகள் படகில் பயணம் செய்த நான்கு பெண்களின் சடலங்கள் நேற்று கரையொதுங்கியதைடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
கடந்த செவ்வாயன்று அகதிப் படகு மூழ்கிய இடத்தில் இருந்து மேற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள உயுங் ஜென்ரெங் (Ujung Genteng) கடற்கரையில் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கரையொதுங்கியள்ளன.

204 பேர் பயணம் செய்ததாக கருதப்படும் இந்தப் அகதிப் படகில் இருந்த 189 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டனர். ஈரான், ஈராக், சிறிலங்கா நாடுகளைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் சிக்கினர்.


சடலங்கள் மீட்கப்பட்டு உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 15 பேரில், 18 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளிட்ட ஆறு சிறுவர்களும், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அடங்கியுள்ளனர்.

இந்த விபத்தில் காணாமற்போனவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரியான ரோச்மாலி (Rochmali) என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமற்போனவர்களின் சடலங்களைத் தேடி இன்று கரையோரப் பகுதிகளில் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஹெலிக்கொப்டர் மூலம் நடத்தப்படும் தேடுதல் தற்போது, 60 கி.மீ தொலைவு வரைக்கும் விரிவாக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

எனினும், நேற்றுக் காலை காணாமற்போனவர்கள் உயிருடன் தப்பியிருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
அகதிகள் படகு விபத்து: 4 பெண்களின் சடலம் கரையொதுங்கின- உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு Reviewed by NEWMANNAR on July 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.