நெற்களஞ்சியம் அமைக்கவேண்டும் ஆக்கராயன்குள விவசாயிகள் கோரிக்கை.
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற அக்கராயன் குளத்தின் கீழ் அதிகளவிலான பயிர்ச்செய்கை நிலங்கள் உள்ளன.
ஆனால் நெல் அறுவடைக் காலங்களில் நெல்லைக் கொள்வனவு செய்யும்போது களஞ்சிய வசதியின்மையைக் காரணங்காட்டி குறைந்த அளவான நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.
இந் நிலையில் அக்கராயன்குளம் விவசாய அமைப்புக்கள் தமது பகுதியில் நெற்களஞ்சியம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. அறுவடை காலத்தில் நெல்லை சந்தைப்படுத்தும் சபையினால் நெல் கொள்வனவுகள் பல்வேறு இடங்களில் இடம்பெற்றபோதிலும் களஞ்சிய வசதிகள் இல்லாததால் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே தமது பகுதியில் நெற் களஞ்சியம் ஒன்றை அமைத்துத்தருமாறு அக்கராயன்குளம் பிரதேச விவசாய அமைப்புக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெற்களஞ்சியம் அமைக்கவேண்டும் ஆக்கராயன்குள விவசாயிகள் கோரிக்கை.
Reviewed by Admin
on
July 19, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment