அண்மைய செய்திகள்

recent
-

வீதிகளைப் புனரமைத்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் முல்லை மாவட்ட மக்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட வேட்டையடைப்பு, அம்பலப் பெருமாள்குளம், கோட்டைகட்டிய குளம், தென்னியன் குளம், உயிலங்குளம் ஆகிய இடங்களுக்கான போக்குவரத்து வசதிகள் சீரின்மையால் மீள்குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


 சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழுகின்ற இப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்னமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையினால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

 அரச, தனியார் போக்குவரத்துச் சேவைகள் இன்மையால் பாடசாலை மாணவர்களும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமக்கான போக்குவரத்து வசதிகளைச் செய்துதருமாறு இப்பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரியுள்ளபோதிலும் போக்குவரத்து வசதிகள் இன்னமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

 இதேவேளை இப் பிரதேசங்களில் உள்ள வீதிகளும் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே உரிய அதிகாரிகள் இப் பிரதேசங்களின் வீதிகளைப் புனரமைத்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என இப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


வீதிகளைப் புனரமைத்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் முல்லை மாவட்ட மக்கள். Reviewed by Admin on July 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.