அண்மைய செய்திகள்

recent
-

யாழில் சிராசின் ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

சுதந்திரக்கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்கள் மேற்கொண்ட மறியல் போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸ் என்பவர் வேட்பாளர் பட்டியிலில் இடம்பெறாததையடுத்தே இந்த மறியல் போராட்டம் இடம்பெற்றது.


 இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் இளைஞர் ஒருவர் 'சிராஸ் அண்ணனை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளாவிட்டால் தீக்குளிப்பேன்' என்று சொல்லி அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த மண்னெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்ற முயற்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் தீக்குளிக்க முயற்சித்த இளைஞனிடம் இருந்து மண்ணெண்ணை கானை பறித்தெடுத்துள்ளனர்.

 குறித்த இளைஞனே இந்த மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளதுடன் போக்குவரத்துக்கு இடையூறு எற்படாமல் முன்னெடுக்குமாறு பொலிஸார் தெரிவித்த போதும் குறித்த இளைஞன் பொருட்படுத்தாமல் பொலிஸாருடன் வாக்கு வாத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சமன்சிகேரா குறித்த இளைஞனைக் கைது செய்து சக பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சில இளைஞர்களின் எதிர்பை அடுத்து பொலிஸார் அவ்விளைஞனை விடுவித்துள்ளனர்.
யாழில் சிராசின் ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி Reviewed by Admin on July 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.