ஆசிரியர் உதவியாளர்களை 3.1 க்கு பதவி உயர்த்துங்கள்
சுமார் 600 பேருக்கு இந்த நியமனம் கிடைத்தது. இவர்கட்கு மாதம் 3000 ரூபா கொடுப்பனவு மட்டுமே வழங்கப்பட்டது. பின்னர் பல தரப்பட்டோரின் முயற்சியின் காரணமாக அக் கொடுப்பனவு 6000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. இவர்களில் பலர் குடும்பத் தலைவர்கள், இதனால், பாரிய பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ் உதவி ஆசிரியர்களில் பலாலி ஆசிரியர் கலாசாலை, மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை, அட்டாளைச் சேனை ஆசிரியர் கலாசாலை போன்றவற்றில் ஆசிரியர் பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளனர். இவர்களை கல்வி அமைச்சு தற்போது ஆசிரியர் சேவை 3.1 இற்குள் உள்வாங்கி மாதாந்தம் ஏறத்தாழ 23000 ரூபா வரை கொடுப்பனவு வழங்குகின்றது.
இதனால் இவ்வாசிரியர்களின் பொருளாதார நிலை உயர்வடைந்துள்ளது. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்குச் செல்லாமல் இருந்தோர் தொலைக் கல்வி மூலம் தமது ஆசிரியர் பயிற்சியைத் தொடர்ந்தனர். அண்மையில் இவர்களின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளது ஆகவே இதனை மையமாக வைத்து இந்ந ஆசிரியர் உதவியாளர்களை தரம் 3.1 க்கு விரைவில் பதவியுயர்த்தி மாதாந்தக் கொடுப்பனவையும் சீர்செய்து இவ்வாசிரியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமாறு இவ்வாசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஆசிரியர் உதவியாளர்களை 3.1 க்கு பதவி உயர்த்துங்கள்
Reviewed by Admin
on
July 21, 2013
Rating:

No comments:
Post a Comment