அண்மைய செய்திகள்

recent
-

ஒருவருடங்களாகியும் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை:பா.அரியநேத்திரன்!

ஒருவருடங்களாகியும் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.


கடந்த வருடம் அரசாங்கத்தினால் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு ஒருவருடங்களாகியும் நிரந்தர நியமனம் வழங்காமல் அரசாங்கம் ஏமாற்றிவருகின்றது.முதலில் ஆறுமாதங்களுக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படுமெனக் கூறிய அரசாங்கம் பின்னர் ஒருவருடங்களுக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென கூறியது

 ஆனால் ஒருவருடங்களாகியும் இன்னும் பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் பட்டம்பெற்று வறுமையில் உள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரம் இந்த பட்டதாரி நியமனத்திலேயே தங்கியுள்ளதாக பல பெற்றோர் என்னிடம் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பல தனியார் நிறுவனங்களில் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் பெற்றுவந்த பலர் அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பி பட்டதாரி பயிலுனர்களாக இணைந்து கொண்டனர் ஆனால் ஒருவருடங்களாகியும் தொடர்ந்தும் அரசாங்கத்தின் பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவில் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லமுடியாதளவு பொருளாதார சுமையினால் கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

எனவே இனியும் அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்றாது அனைத்துப் பட்டதாரிகளுக்கும் உடனடியாக நிறந்தர நியமனம் வழங்கவேண்டும் என்று கூறினார்.

ஒருவருடங்களாகியும் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை:பா.அரியநேத்திரன்! Reviewed by Admin on July 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.