அண்மைய செய்திகள்

recent
-

சிலாவத்துறை கமநல சேவை நிலையம் எங்கே?.....

யுத்தத்தால் வடக்கில் இருந்த பல அரச நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.பின்னர் பெரும்பாலானவை மீள்நிர்மானம் செய்யப்பட்டுள்ளன.


முசலிப்பிரதேச செயலகப்பிரிவில் இரண்டு கமலநலசேவை நிலையங்கள் இருந்தன.அவற்றில் ஒன்று வேப்பங்குளத்திலும்,மற்றையது தம்பட்ட முசலிகட்டுச் சந்தி சிலாவத்துறையில் அமைந்திருந்தது.இவ்விரு நிலையங்களும் குழுக்களைச்சிறப்பாக அமைத்து விவசாயிகளுக்குப் பின்வரும் சேவைகளை வழங்கி வந்தன.


விவசாகளுக்கு ஆலோசனை வழங்கல்
மானிய அடிப்படையில் உழவு இயந்திர சேவை வழங்குதல்
பசளை வினியோகம் செய்தல்
எண்ணெய் தெளி கருவிகள் வழங்குதல்
விதைநெல் வழங்குதல்

   ஆனால் 1990 இன் பின்பு இவ்விரு நிலையங்களும் அழிக்கப்பட்டிருந்தன.மக்களின் மீள்குடியேற்றத்தின் பின்பு வேப்பங்குளம் கமநல சேவை நிலையம் அதே இடத்தில் மீள் நிர்மானம் செய்யப்பட்டுவிட்டது . சிறந்த சேவையை அந்நிலையம் வழங்கி வருகிறது.இதற்கு அமைச்சர்களால் பல உழவு இயந்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள உழவு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு விவசாயிகளுக்கும்,அதிகாரிகளுக்கும் உண்டு.இவ்வாகனங்கள் நீண்டகாலமாக வெயிலிலோ,மழையிலோ நிறுத்தி வைக்கப்படுமாயின் அவை பழுதடையும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.ஆகவே, வாகனத்தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு அதனுள்ளே உழவு இயந்திரங்கள், பெட்டிகள் என்பன நிறுத்தப்படவேண்டும்.

இவை சிறப்பாகப் பாதுகாக்கப்படும்போதுதான் விவசாயிகளுக்கு சிறந்த சேவை கிடைக்கும்
  முசலியின் தென்பகுதிக்கிராமங்களுக்கு, உரிய சேவைகள் கிடைக்க வேண்டுமென்றால் உடனடியாக முசலிதெற்கு கமநல சேவை நிலையம் அது முன்பு இருந்த பிரதேசத்தில் மீள் நிர்மானம் செய்யப்படவேண்டும்.முசலிதெற்குப்பிரதேச விவசாயிகள் வேப்பங்குளம் கமநல சேவைநிலையத்திற்குச் செல்வதனால் சில நெருக்கடிகளும், அசௌகரியங்களும் ஏற்படுகின்றன.

ஆகவே, இச்சிக்கல்களைத் தீர்த்து வைக்க 1990 இற்கு  முன்பு இருந்ததுபோல சிலாவத்துறை கமநல சேவை நிலயத்தை மீளநிர்மானித்துத் திறக்க அரசியல்வாதிகளும்,மன்னார் மாவட்ட விவசாயப்பணிப்பாளரும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கைவிடுகின்றனர்.
       
கே.சி.எம்.அஸ்ஹர்





சிலாவத்துறை கமநல சேவை நிலையம் எங்கே?..... Reviewed by Admin on July 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.