அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் இடம் பெயர்ந்த தமிழ்,முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றாது 6 ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்ற அரசு முயற்சி-செல்வம் எம்.பி

மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் அரசாங்கம்  சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகம்,நாட்டில் இடம் பெற்ற அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இடம் பெயர்ந்து சென்ற தமிழ்,முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்தை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக அவர்   வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

மன்னார் மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்கள் உள்ளடங்களாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் அரசாங்கம் 6 ஆயிரம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

ஆனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து சென்று வேறு இடங்களில் அகதிகளாக வாழ்ந்து வரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தமிழ்,முஸ்லிம் குடும்பங்களை உரிய முறையில் அவர்களுடைய சொந்த மண்ணில் குடியேற்றம் செய்ய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றது.

ஆனால் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள பல்வேறு உத்திகளை அரசு கையாண்டு வருகின்றது.

தமது மீள் குடியேற்றங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து தமது சொந்த மண்ணில் மீள் குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் இது தொடர்பில் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களை முதலில் உரிய முறையில் அரசு மீள் குடியேற்றம் செய்ய வேண்டும்.

இந்த மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படால் சிங்கள குடியேற்றங்களை அரசு மேற்கொண்டால் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு நீதிமன்றதத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும்.

எனவே யுத்தத்தினால் பல பாதிப்புக்களையும்,இழப்புக்களையும் சந்தித்த தமிழ்,முஸ்லிம் மக்களை அவர்களுடைய சொந்த மண்ணில் உரிய முறையில் குடியேற்றம் செய்ய உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இடம் பெயர்ந்த தமிழ்,முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றாது 6 ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்ற அரசு முயற்சி-செல்வம் எம்.பி Reviewed by Admin on July 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.