மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினருக்கு அதிகளவான காணிகள் ஓதுக்கீடு-இடம் பெயர்ந்த மக்கள் மீள் குடியேறுவதில் சிரமம்.(படங்கள் )
குறித்த காணிகள் மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி, மன்னார் சௌத்பார் பிரதான வீதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகள் பனை மரக்காடுகள் மற்றும் அடர்ந்த காடுகளிலேயே ஒதுக்கீடுகள் இடம் பெற்றுள்ளது.
அதிகளவான தனியார் காணிகளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
கடந்த யுத்த காலத்தில் அதுவும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான தமிழ்,முஸ்ஸிம் குடும்பங்கள் அகதிகளாக இந்தியாவிற்கும் ஏனைய இடங்களுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
இடம் பெயர்ந்து சென்றவர்கள் தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
இடம் பெயர்ந்து சென்றவர்களை விட அதிகரித்த எண்ணிக்கையுடையவர்களாக அவர்கள் மீண்டும் சொந்த மண்ணுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு காணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தனியார்,மற்றும் அரச காணிகள் இராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும், நகர,பிரதேச அரசியல் வாதிகளும் விசனம் தெரிவித்துள்ளனர்.
முஹமட் ஆசிக்-தலைமன்னார்
மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினருக்கு அதிகளவான காணிகள் ஓதுக்கீடு-இடம் பெயர்ந்த மக்கள் மீள் குடியேறுவதில் சிரமம்.(படங்கள் )
Reviewed by Admin
on
July 21, 2013
Rating:
No comments:
Post a Comment