அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தினம்

தமிழ் தேசிய வீரர்கள் தினம் எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் அனுஸ்ரிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.


 1983 ஆம் ஆண்டு யூலைத்திங்கள் 25,27 ஆகிய தினங்களில் வெளிக்கடை வெஞ்சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் ஸ்தாபக தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டிமணி உட்பட போராளிகள்,பொதுமக்கள் 53 பேரின் 30 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு குறித்த அஞ்சலி நிழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் , இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்,தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு நினைவுரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தினம் Reviewed by Admin on July 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.