அண்மைய செய்திகள்

recent
-

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க 73.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கடலில் அண்மையில் ஏற்பட்டிருந்த சூறாவளி காரணமாக உயிரிழந்த மீனவர்களின் உறவினர்களுக்கும் சேதமடைந்த படகுகளுக்கும் இழப்பீடு வழங்குவதற்காக 73.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டது.


இதன்பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்த விசேட அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், உயிரிழந்த மீனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு செலுத்துவதற்கும் சேதமடைந்த படகுகள் மற்றும் உபகரணங்களுக்காக புதியனவற்றை வழங்குவதற்கும் பகுதியளவில் சேதமடைந்த படகுகளுக்கு 50 வீத இழப்பீடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அண்மையில் ஏற்பட்டிருந்த சூறாவளியினால் உயிரிழந்த மீனவர்களின் அடையாளம் மற்றும் படகுகளின் விபரங்கள் உள்ளிட்ட தரவுகளை பெற்றுக்கொண்டவுடன் விரைவில் இழப்பீடுகளை வழங்குவதற்கு எண்ணியுள்ளதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின் பிரகாரம் ஏற்பட்டிருந்த அனர்த்தத்தில் 51 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காணாமற்போயுள்ளனர்.

இதேவேளை, 84 படகுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 76 படகுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க 73.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு Reviewed by Admin on July 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.