தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க விரைவில் வர்த்தமானியில் அறிவிப்போம்; தொல்லியல் திணைக்களம்
அத்துடன் இலங்கையில் ஏறத்தாழ 170 இடங்களில் தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் 50 வீதமானவை வடக்கில் காணப்படுகிறன. அவற்றின் விபரங்களும் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும். எனினும் வடக்கில் கடந்த காலங்களில் ஏற்பட்ட போர் காரணமாக ஆய்வுகள் செய்யமுடியாமல் போனது.
அதேவேளை வன்னிப் பகுதியில் மிதிவெடி காரணமாகவும் ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது அந்தப் பகுதியில் தொல்பொருன் ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்படடுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களிலுள்ள தொல்பொருள் சின்னங்கள் பற்றிய ஆய்வு நிறைவடைந்துள்ளது என்றும் அதற்கான ஆய்வுகள் வவுனியாவில் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மைக்காலமாக தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப் படாததாலும் ஆளணிப் பற்றாக்குறையாலும் ஆய்வுப் பணிகளில் பின்னடைவு ஏற்படுவதாக குறிப்பிட்டார். இருப்பினும் தற்போது தொல்பொருள் சின்னங்கள் திருடப்படுவதால் அவற்றை ஆவணப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க விரைவில் வர்த்தமானியில் அறிவிப்போம்; தொல்லியல் திணைக்களம்
Reviewed by Admin
on
July 03, 2013
Rating:

No comments:
Post a Comment