அண்மைய செய்திகள்

recent
-

பேசாலையில் மீனவர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர்-கொண்சால் குளாஸ்!

பேசாலை கடற்பரப்பில் டோலர் மூலம் மீன் பிடியில் ஈடுபட்டு வரும் பேசாலையைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் றோலர் மூலம் மீன் பிடியில் ஈடுபட்டு வரும் அணைத்து மீனவக்குடும்பங்களும் இந்தியாவிற்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபை உறுப்பினர் கொண்சால் குளாஸ் தெரிவித்துள்ளார்.


 இது தொடர்பாக அவர் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையி -மன்னார் பேசாலையில் 500 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் டோலர் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.டோலர் தொழில் செய்வதற்கு வழங்கப்பட்ட தினங்களிலேயே அவர்கள் அந்த தொழிலை செய்து வருகின்றனர்.

 தற்போது மன்னார் மாவட்ட கடல் தொழில் உதவி பணிப்பாளர் எமது மீனவர்களுடன் தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகின்றார்.புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சோர்ந்த சகோதர இன மீனவர்களை வைத்து பேசாலையைச் சேர்ந்த டோலர் தொழில் செய்யும் பேசாலை மீனவர்களை பிடித்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இதனை பேசாலை மீனவ சமூகம் வண்மையாக கண்டிக்கின்றது.எமது கடற்பரப்பில் நாளாந்தம் பல ஆயிரக்கணக்காண இந்திய மீனவர்கள் டோலர் மூலம் மீன்பிடிக்கின்றனர். அது மட்டுமின்றி கற்பிட்டி நீர்கொழும்பு ஹெந்தல போன்ற இடங்களைச் சேர்ந்த மீனவர்களும் டோலர் மூலம் மீன் பிடிக்கின்றனர்.


 ஆனால் பேசாலை மீனவர்கள் டோலர் மூலம் மீன் பிடித்தால் அவர்களை பிடித்து மன்னார் மாவட்ட கடல் தொழில் உதவிப்பணிப்பாளர் தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். குறித்த செயலை அவர் பக்கச்சார்புடன் செய்து வருகின்றார்.

 இவருடைய குறித்த செயற்பாட்டினால் பேசாலையில் டோலர் தொழிலில் ஈடுபட்டு வரும் 500 இற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தமது படகுகளில் வெள்ளைக்கொடிகளை ஏந்திய வாறு இந்தியாவிற்கு அகதிகலாகச் சென்று இந்தியாவில் இருந்து போசாலை கடற்பரப்பில் டோலர் தொழில் செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடையத்தில் பக்கச்சார்பின்றி உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என மன்னார் பிரதேச சபை உறுப்பினர் கொண்சால் குளாஸ் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


பேசாலையில் மீனவர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர்-கொண்சால் குளாஸ்! Reviewed by Admin on July 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.