செல்வாக்கினை பயன்படுத்தி ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று செல்வதால் வன்னியில் ஆசிரியர் பற்றாக்குறை. மாணவர்களும் பெற்றோரும் கவலையில்
பாதிப்படைவதாகவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
அண்மையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்திலுள்ள ஆயிரம் பாடசாலைத் திட்டத்தின் கீழான நியமனத்தில் கனகராயன் குளம் மகா வித்தியாலயத்திற்கு இரசாயனவியல் பாட ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் அடுத்த வருடங்களில் இப்பாடசாலைகளில் விஞ்ஞான பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் அப்பாடசாலையில் விஞ்ஞான பாடத்திற்குநிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையும் நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் குறித்த ஆசிரியர் 3 கிழமைகளில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். இதனால் அப்பாடசாலையில் விஞ்ஞான பிரிவை ஆரம்பிப்பது கேள்விக்குறியாகவுள்ளது.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருகின்றமையால் பின்தங்கிய பாடசாலைகளைக் கருத்திற்கொண்டு இடமாற்றங்களை உடனடியாக நிறுத்துமாறும் அப்பகுதி மக்கள்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செல்வாக்கினை பயன்படுத்தி ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று செல்வதால் வன்னியில் ஆசிரியர் பற்றாக்குறை. மாணவர்களும் பெற்றோரும் கவலையில்
Reviewed by Admin
on
July 29, 2013
Rating:

No comments:
Post a Comment