மன்னார் மாவட்டத்தில் தரமான உத்தியோகஸ்தர்கள் சமூர்த்தி பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் றிசாட் பதியுதீனின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர்.
மன்னார் பிரதேச செயலகத்தின் சமூர்த்தி வடக்கு வங்கி அண்மையில் பேசாலை கலாச்சார மண்டபத்தில் திறந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன் போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், , ,, ,
தற்போது நியமிக்கப்பட்டுள்ள சமூர்த்தி உத்தியோகஸ்தர்களின் சேவை திருப்தி இல்லை என்றால் எங்களிடம் முறையிட முடியும்.மக்களின் தேவைக்காகவும்,மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் இந்த சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 17 வருடங்களுக்கு முன் ஏனைய மாவட்டங்களில் சமூர்த்தி திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு இந்த சமூர்த்தி திட்டத்தை அமைச்சர் றிஸாட் பதியுதீன் அயராக முயற்சியின் காரணமாக கொண்டு வந்து அமுல் படுத்தியுள்ளார்.
எனவே மன்னார் மாவட்ட மக்கள் அமைச்சருக்கு நன்றியுள்ளவர்களாக செயற்பட வேண்டும் என அமைச்சர் றிசாட் பதியுதீனின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர் தனது உரையில் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் தரமான உத்தியோகஸ்தர்கள் சமூர்த்தி பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் றிசாட் பதியுதீனின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர்.
Reviewed by Admin
on
July 14, 2013
Rating:
Reviewed by Admin
on
July 14, 2013
Rating:


No comments:
Post a Comment