மன்னார் மாவட்டத்தின் மாந்தை பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரிசாத் (படங்கள்)
மடு வலய பிரதி கல்விப் பணிப்பாளர் விஸ்வா தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டது.அதனையடுத்து இடம் பெற்ற கூட்டத்தில் மாந்தை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் செல்லத்தம்பி பேசுகையில் கூறியதாவது
இன்று எமது மீள்குடியேற்றம் முதல் அதனையடுத்துவந்துள்ள உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை நாம் மனதார ஏற்றுக் கொண்டுள்ளோம்.எத்தனையோ வருடங்களுக்கு பின்பு இன்று எமது இளைஞர்கள் அரச நியமனங்களை பெற்றுள்ளனர்.அதற்கு காரணம் அமைச்சர் றிசாத் பதியுதீன் எஎன்றால் மிகையாகாது.
தமிழ்,முஸ்லிம் என்ற பேதமின்றி எம்மால் கோரப்படும் அனைத்து கோறிக்கைகளுக்கும் சாதகமாக பதில் தரும் ஒருவராக இருக்கினறமை எமது மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள இலகுவானதாக இருக்கின்றது.எமது மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலைமையில் ஒன்று பட்டு பிரதேசத்தினதும்,மாவட்டத்தினதும் அபிவிருத்திகளை முன்னெடுக்க தீர்மாணித்துவிட்டார்கள் என்றும் கூறினார்
ஆண்டான்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் நந்தன் உரையாற்றும் போது
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுடன் நெருங்கி பழகும் சந்தர்ப்பம் இன்று ஏற்பட்டுள்ளது.அவர் எதையெல்லாம் இந்த மக்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைக்கின்றாரோ அதனை இனம்,மதம் கடந்து செய்துள்ளார்.நாம் கேட்காமல் எத்தனையோ அபிவிருத்தி திட்டங்களை எமது பிரதேசத்திற்கு கொண்டுவந்து கொடுத்துள்ளார்.அதற்கு எமது மக்கள் என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளவர்களாக இருக்கின்றோம்.எதிர்வரும் தேர்தல்களில் அமைச்சர் தலைமையிலான வேட்பாளர்களை ஆதரித்து அராசங்கத்தின் ஊடக பெறக் கூடிய அனைதது வசதிகளையும் எமது கிராமமும் பெறுவதற்கு நாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்றும் கூறினார்.
மன்னார் மாவட்டத்தின் மாந்தை பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரிசாத் (படங்கள்)
Reviewed by Admin
on
July 23, 2013
Rating:

No comments:
Post a Comment