தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் வீட்டுத்திட்டம் வினோ எம்.பியால் கையளிப்பு (படங்கள்)
-தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கழக உறுப்பினரான வினோத் என்பவருக்கே குறித்த வீடு கையளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஞபகார்த்தமாக தென்னங்கன்று ஒன்றும் குறித்த அதிகாரிகளினால் நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் சிசர விஜய ரட்ன,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட சம்மேளனத்தலைவர் அமுதராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வவுனியா சாத்திரி கூழாங்குளம் பகுதியில் இடம் பெற்று வரும் தையற்பயிற்சியில்; கலந்து கொள்ளும் யுவதிகளை சந்தித்து உரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் வீட்டுத்திட்டம் வினோ எம்.பியால் கையளிப்பு (படங்கள்)
Reviewed by Admin
on
July 06, 2013
Rating:
No comments:
Post a Comment