இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்கும் மீனவர்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!
உத்தரவினை மீறிச் செயற்படுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற் பரப்பிற்குள் பிரவேசிக்கும் மீனவர்களுக்கு ஐயாயிரம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்படுவதுடன், சகல விதமான மீனவ நலன்களும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தடவையும் அதே குற்றத்தை இழைத்தால் பத்தாயிரம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாகவும் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டால் வள்ளங்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்கும் மீனவர்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!
Reviewed by Admin
on
July 20, 2013
Rating:

No comments:
Post a Comment