கிளிநொச்சியில் பூச்சிமருந்து சுவாசித்த 14 மாணவர்கள் மருத்துவமனையில்!
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.
மேற்குறித்த பகுதியில் உள்ள சிறுவர்கள் மாலை நேர வகுப்பிற்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். இதன் போது வீடு செல்லும் வழியில் உள்ள வீட்டு உரிமையாளர் தனது காணியின் எல்லையில் அமைந்துள்ள வேலியில் கறையானுக்கு பூச்சி மருந்து விசிறியுள்ளார்.
அவர் விசிறிய பூச்சி மருந்து காற்றில் கலந்ததால் வீதியால் சென்ற சிறுவர்கள் பூச்சிமருந்தினை சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் சற்றுத் தூரம் சென்ற சிறுவர்கள் ஒவ்வெருவராக வாந்தி எடுத்ததுடன் மயக்கமடைந்து வீதியில் விழ ஆரம்பித்துள்ளனர்.
இதனைப்பார்த்துக் கொண்டிருந்த அயல் வீட்டில் உள்ளவர்கள் அங்கு மயக்கமடைந்த 14 சிறுவர்களையும் அங்கிருந்து முழங்காவில் வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலைக்கு அச் சிறுவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் பூச்சிமருந்து சுவாசித்த 14 மாணவர்கள் மருத்துவமனையில்!
Reviewed by Admin
on
July 28, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment