அண்மைய செய்திகள்

recent
-

பட்டதாரி பயிலுநர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைப்புச் செய்யப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்கு ஓய்வூதியத்துடன் கூடிய
நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.


பட்டதாரிப்பயிலுநர் சேவைக்காலம் ஒருவருடம் தவிர்ந்த ஏனைய காலப்பகுதிக்கு சம்பளநிலுவையும் வழங்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

கடந்த 2011 ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் ''பட்டதாரி பயிலுநர்'' நியமனம் வழங்கப்பட்டு அவர்கள் பல்வேறு திணைக்களங்களில் கடமைக்கு இணைப்புச் செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு நியமனம் வழங்கப்பட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வந்தன.

இவர்களில், பொருளாதார அமைச்சில் இணைப்புச் செய்யப்பட்டவர்களுக்கு ஓய்வூதியத்துடன் கூடிய நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதோடு ஒருவருட பயிற்சிக்காலத்துக்கு பிற்பட்டகாலப்பகுதிக்கு உரிய சம்பள நிலுவையும் வழங்கப்படவுள்ளது.

பட்டதாரிகளுக்கு குறைந்தது நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் சம்பளத்திட்டம் வழங்கப்படவேண்டும். அந்தவகையிலான சம்பளத்திட்ட அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

பொருளாதார அமைச்சின் கீழ் இணைப்புச் செய்யப்பட்டள்ள பட்டதாரிப் பயிலுநர்கள் நாடளாவிய ரீதியில் சகல கிராம அலுவலர் பிவுகளிலும் ஒவ்வொருவர் பொருளாதார அபிவிருத்தி அலுவலர் என்ற பதவியிலும் பிரதேச செயலகங்களில் மூவர் என்ற வகையிலும் இணைப்புச் செய்யப்பட்டு கடமையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பட்டதாரி பயிலுநர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் Reviewed by Admin on July 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.